Niroshini / 2017 மே 20 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று - கண்ணகி கிராமத்தின் கண்ணகி வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு, நேற்று பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வி.இராசவேல் தலைமையில் கல்விச்சமூகத்தின் ஒத்துழைப்போடு காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடம்பெற்ற இரத்ததான நிகழ்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமின் செயற்பாடுகளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ரி.கே. சம்ஸ் நிகால் தலைமையிலான வைத்திய குழாமினர் முன்னெடுத்தனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026