2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலக்கிய விழா: மாகாண போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்

Princiya Dixci   / 2021 மார்ச் 23 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான மாகாண இலக்கிய விழா போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களை நிரந்தர வதிவிடமாக கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு, அவர்களை கௌரவிப்பதன் மூலம், அவர்களது கலை, இலக்கியப் பணிகளுக்கு அங்கிகாரம் வழங்குவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு படைப்புலக முன்னோடிகளாக அவர்களை இனங்காட்டுவதனை நோக்கமாகக் கொண்டதாக இந்த விழா அமையுமென அறிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பிரசுரமான சிறந்த நூல்கள், குறும்திரைப்பட ஆக்கங்களைத் தேர்வு செய்யும் வண்ணம், கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தமது படைப்புக்களைச் சமர்ப்பிக்க முடிமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் யாவும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தருடன் அல்லது பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 026 - 2220036 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X