Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
கிழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் கோவிலின் உள்வீதியில் உள்ள பழைய மணல் அகற்றப்பட்டு புதிய மணல் இடும் வருடாந்த சிரமதான பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இரு நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவிலின் உற்சவம், இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், நடைபெறும் சிரமதானப் பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளும் திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இதற்கமைய, ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் பல சிரமதானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவில் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கத்தின் தலைமையில், ஆலோசகரும் அம்பாறை மாவட்ட ஓய்வு பெற்ற உள்ளக் கணக்காய்வாளருமான எஸ்.கனகரெத்தினம் வழிகாட்டலில், 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஒன்றிணைந்து, உள் வீதியில் இருந்த பழைய மணலை அகற்றி, நான்கு உழவு இயந்திரங்களின் உதவியோடு புதிய மணலை இட்டு, உள்வீதியை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
அத்தோடு, யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் கோவில் வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன், நீராடுவதற்குப் பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளையும் தூய்மைப்படுத்தினர்.
கோவில் உற்சவம், ஜுலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாவதுடன், ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதியுடன் நிறைவறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago