Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அம்பாறை மாவட்டத்திலுள்ள உணவங்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உடன் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உணவகங்கள், பேக்கரிப் பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குகின்றனவா என்பதனை உடன் கண்காணித்து நோய்த் தொற்றில்லாத, ஆரோக்கிய உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அதிகாரிகளை, பொதுமக்கள் வேண்டுகின்றனர்.
கூடுதலானோர் அன்றாட உணவுப் பொருள்களை உணவகங்களிலேயே கொள்வனவு செய்வதால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, உணவகங்களில் தொழில்புரிவோரின் ஆரோக்கியம், சுகாதார நிலை என்பனவற்றை கண்காணிப்பது மிகவும் அவசியமாகிறது என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுமக்களின் சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு பிரதேசங்களுக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில், உணவகங்களையும், தொழிலாளர்களையும் பரிசோதித்து, ஆரோக்கியத்துக்குப் பொருத்தமில்லாத உணவகங்களை மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago