2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உணவு சீர்கேடுகள்; அதிரடி சட்ட நடவடிக்கை

Editorial   / 2021 நவம்பர் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உணவு சீர்கேடுகள் மற்றும்  உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் அவதானிக்கப்படின், துரித கதியில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில், “உணவகங்களில் சுகாதார சீர்கேடு என்பது தொடர்ச்சியாக எமக்கு கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடு ஆகும்.

“கொரோனா அனர்த்த நிலைமையை அடுத்து பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், உணவு சீர்கேட்டினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“கல்முனை பிராந்தியத்தில் உணவகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றது. கடந்த வருடங்களிலும் அதிகளவான சுகாதார சீர்கேடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இருந்த போதிலும், கொரோனா அனர்த்த நிலைமையிலும் கூட இவ்விடயத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.

“எமது பிராந்தியத்தில் உணவு பாதுகாப்பிற்கென தனிப்பிரிவும் தொற்றுநோய் பிரிவும் தனித்தனியே இயங்குகின்ற நடைமுறை   காணப்படுகின்றது. அந்த வகையில், உணவு சுகாதார சீர்கேடுகளை தடுப்பது  எமக்கு பாரிய பொறுப்பாக உள்ளது.

“சவால்களுடன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டு அன்றாடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .