Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Thipaan / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
வாங்காமம், 10 ஆம் கொலனியில் கடந்த புதன்கிழமை(05) வழங்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்டதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அம்பாறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரு பெண்கள் உட்பட மூவர், நேற்று (06) இரவு உயிரிழந்துள்ளனர்.
இறக்காமத்தைச் சேர்ந்த அபூபக்கர் காசிம்பாவா (வயது 49), கலந்தர்லெப்பை மரியம்கண்டு (வயது 64), அபூபக்கர் அலிமானாச்சி (வயது 40) ஆகியோரே இறந்தவர்களாவர்.
உணவு ஒவ்வாமை காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் உபாதைக்குட்பட்டு அம்பாறை, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மூன்று கற்பிணித் தாய்மார்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
வியாழக்கிழமை(06) நள்ளிவு வரை, 920 பேருக்கும் அதிகமானோர் இறக்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்காமம் மாவட்ட வைத்தியசாலையில் போதிய இடம் இன்மையால், வைத்தியசாலையின் வெளிப்பகுதியில் நோயாளர்கள் தங்கவைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உடனடியாக ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாதியர்களும் கொண்டுவரப்பட்டு, வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அவசரமாக மருந்து வகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தகப்பன் மற்றும் குழந்தைகள் என பலர் வைத்தியசாலையில் நிரம்பிக் காணப்படுவதுடன், இறக்காமம் பிரதேசமெங்கும் சோக மயமாகக் காட்சி அளிக்கிறது.
பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எல். தவம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago