2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு கௌரவம்

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், அப்பிரதேச செயலகத்தினால் இன்று (11) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டச் செயலக பிரதம கணக்காளர். எஸ்.எல்.ஆதம்பாவா உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், பிரதம கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்திருந்த இவர், இலங்கைத் திட்டமிடல் சேவையில் சித்தியடைந்து, பல பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி, தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .