Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள். விவசாய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அறுவடை செய்யப்படும் நெல்லிற்கு உத்தரவாத விலை கிடைக்காமையினால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது தனியாரினால் குறைந்த விலையிலேயே நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் விவசாயச் செய்கை ஆரம்ப முதல் கடுமையான வரட்சி நிலவிவருவதனால் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளுக்கு நீர் கிடைக்கவில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கை கைவிடப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நெற் செய்கைகள் குறைந்த விளைச்சலையே தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் கடன்களைப் பெற்று செய்து வந்த இந் நெற்செய்கைகளுக்கு அறுவடையின் போது, உத்தரவாத விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் நிலை மிகவும் கீழ்மட்ட நிலைக்கு சென்றுவிடும். பெற்ற கடன்களையும் அடைப்பதற்கு வழியில்லாது திண்டாடுகின்றனர்.
எனவே தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை அரசாங்கம் உத்தரவாத நிலைக்கு கொள்வனவு செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் விவசாய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .