2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உரிய இடத்துக்கே ஆவணங்கள் மாற்றம்

Princiya Dixci   / 2021 நவம்பர் 01 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பாணாம கமநல கேந்திர நிலையத்தில் இருந்த பொத்துவில் நாவலாறு தெற்கு பிரதேச காணிகள் தொடர்பான சகல ஆவணங்களும் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்கே மாற்றப்பட்டுள்ளன.

பல வருடங்களாக பொத்துவில் பிரதேச விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டு வந்த நாவலாறு தெற்கு பிரதேச காணிகள் தொடர்பான சகல ஆவணங்களும் பாணம கமநல கேந்திர நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தன.

இதனால் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட விவசாயிகள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டு வந்ததையடுத்து, இது தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷரபின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் முஷரபின் வேண்டுகோளுக்கினங்க, கமநல அபிவிருத்தி  ஆணையாளர் நாயகத்தால் பாணாம கமநல கேந்திர நிலையத்தில் இருந்த நாவலாறு தெற்கு விவசாயிகளின் சகல ஆவணங்களும் பொத்துவில் கமநல கேந்திர நிலையத்துக்கு  மாற்றப்பட்டுள்ளன.

இதற்கான தீர்வை பெற்றுக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பிரதேச விவசாய அமைப்புக்கள் நன்றி தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .