Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிஸாரைத் தாக்கியும், வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உறவினர்கள் மூவரையும் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் இன்று (25) உத்தரவிட்டார்.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2016 ஜுலை மாதம் 17ஆம் திகதி, அம்பாறை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, வாகனத்துக்கும் சேதத்தை ஏற்படுத்திருந்தனர்.
இதையடுத்து சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து சம்மந்தப்பட்ட உறவினர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
27 minute ago