2025 மே 01, வியாழக்கிழமை

உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தையிட்டு கட்டுரைப் போட்டி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி கல்வி அமைச்சும், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையும் இணைந்து மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.

புகைத்தல், புகையிலைப் பாவனையின் ஆபத்து தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டல் இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் சகல பாடசாலையின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்குரிய தலைப்புகளும் வயதெல்லைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு, 'புகையிலையைப் பாவிக்காதிருத்தல் ஓர் ஆரோக்கிய நற்பழக்கமாகும்' எனும் நலைப்பும், கனிஷ்டப் பிரிவு பிரிவு மாணவர்களுக்கு, 'புகைத்தலில் இருந்து விலகி நோயற்ற அறிவுள்ள பிரஜைகளாகவோம்' எனும் தலைப்பும், சிரேஷ்டப் பிரிவு பிரிவு மாணவர்களுக்கு, 'இலங்கை இளைஞர்களிடையே புகைத்தல் பாவனை குறைவடைந்து செல்வது, அவர்களது அறிவைக்காட்டி நிற்கின்றது' ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களது ஆக்கங்களை, மே மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் தலைவர், புகையிலை மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை, 11ஆவது மாடி யு, செத்சிறிபாய, 02ஆவது மாடி, பத்தரமுல்ல எனும் முகவரிக்கு அனுப்புமாறு அதிபர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .