Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பற்றிச் சிந்திக்கும் நாம், ஏனைய 7 மாகாணங்களிலும் வாழ்ந்துவரும் தமிழ், முஸ்லிம்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும்' என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீமின் ஊடகப்பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நிந்தவூர் பிரதேச சபையில் ஞாயிற்றுக்கிழமை (9) இரவு நடைபெற்றது. அதில்;; கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'அரசியலமைப்பு மாற்றத்தில் தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவந்து புகுத்தியுள்ளமை சிறுபான்மைச் சமூகத்;துக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்ந்துவரும் முஸ்லிம்களுக்கு பேராபத்தாக அமையும்.
'அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறை மாற்றம் ஆகிய மூன்று விடயங்களில் இந்தத் தேர்தல் முறை மாற்றம் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் பேராபத்தை ஏற்படுத்தும்.
'அராஜக ஆட்சியை விரட்டி, நல்லாட்சியைக் கொண்டுவந்தோம் என்று கூறும் நாம், இந்த நல்லாட்சியில் முஸ்லிம்களின் 2 ஆயிரம் ஏக்கர் காணி அரசு உடமையாக்கப்பட்டுள்ளது.
'இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இரு பெரும்பான்மைக் கட்சிகளும் இணைந்து சிறுபான்மை மக்களுடைய இருப்பை, எதிர்கால நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு செய்யப்போகும் சதி முயற்சிக்குத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் துணைபோக வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.
இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், 'கடந்தகால வரலாறுகள் நம்பிக்கையீனத்தையும், பிளவுகளையும், பிரச்சினைகளைதையும் ஏற்படுத்தியுள்ளன என்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிறந்த அரசியல் தலைமைகள் இருக்கும் போதிலும், சிலர் அதிகாரங்களை வைத்துக்கொண்டு, அந்த அதிகாரங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டோம் என்று மறந்து செயற்படுகின்றார்கள்.
தமிழ், முஸ்லிம் உறவு மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிப் பேசுபவர்கள், கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்துபவர்கள் சிறுபிள்ளைத்தனமாக கடந்த காலத்தில் பேசியமை கவலை அளிக்கின்றது' என்றார்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago