2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘ஏழைகளின் கண்ணீரில் அரசாங்கம் சவாரி செய்கிறது’

Princiya Dixci   / 2021 ஜூன் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எஸ்.கார்த்திகேசு

எரிபொருள் விலையேற்றத்தினூடாக இந்த அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

கொரோனா அசாதார நிலைமையால் பாதிப்புற்ற பொத்துவில் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் போதே, அவர் இவ்வாறு தொவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய நாடுகளிலும் விட இலங்கையில் பெற்றோல் விலை குறைவென்று அரசாங்கம் கூறுகின்றது. எனினும், மற்றைய நாடுகளில் இருக்கின்ற அரிசி, மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் அவற்றின் விலை அதிகமாக இருக்கின்றது.

“இங்கு எரிபொருளின் விலையேற்றம் என்பது தனியே எரிபொருளுக்கு மாத்திரமல்ல; எரிபொருளைப் பயன்படுத்துகின்ற போக்குவரத்தில் இருந்து உணவுத் தயாரிப்பு என எல்லாவற்றிலும் விலை அதிகரிப்பு இடம்பெறும். தற்போது எரிவாயுவுக்கான விலையும் அதிகரிக்க இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

“எனவே, மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கமானது மூழ்கும் நிலையிலுள்ள கப்பலுக்குச் சமமானதாகவே இருக்கின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .