Janu / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் சனிக்கிழமை (21) நள்ளிரவு சந்தேகத்திற்கிடமாக சென்ற வேன் ஒன்றை பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதிலிருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த 24 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த வேன் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களான மருதமுனை பகுதியை சேர்ந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026