Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.நிப்றாஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ் றபீக்), அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய 4 பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
மேற்படி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவராகப் பதவி வகித்த பிரதியமைச்சர் பைசல் காசிம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், அப்பதவியில் இருந்து பிரதியமைச்சர் நீக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக யூ.கே.ஆதம்லெப்பை, ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார் எனவும், ஜனாதிபதியின் செயலாளர், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.
யூ.கே.ஆதம்லெப்பை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர் என்பதுடன், பிரதமரின் வேண்டுகோளுக்கமைய, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026