Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 24 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (24) தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல், அவதானமாக இருக்குமாறும், கொதித்தாறிய நீரைப் பருகுமாறும், கேட்டுள்ளார்.
இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றனவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இக் காய்ச்சல் அறிகுறிகள் தொடர்ந்து காணப்படுமாயின் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவித்துள்ளார்.
கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்றாளர்களின் சதவீதம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், அறிவித்துள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் அது தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago