2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன் காலமானார்

Editorial   / 2022 ஜனவரி 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நிந்தவூர் பிரதேசத்தின் முதலாவது ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.அமீன், தனது 77ஆவது வயதில் இன்று (18) காலமானார்.

கிழக்கிலங்கையின் ஊடகத்துறை முன்னோடியாகத் திகழ்ந்த இவர், 1960 ஆம் ஆண்டு தொடக்கம் வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றியிருப்பதுடன் தினபதி, சிந்தாமணி உள்ளிட்ட வேறு சில தேசிய பத்திரிகைகளினதும் செய்தியாளராக செயற்பட்டிருக்கிறார்.

இவர், நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளராகவும் நிந்தவூர் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் நிந்தவூர் வர்த்தகர் சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்புகளை வகித்து சமூக மற்றும் பிரதேசம் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளார்.

எழுத்து, பத்திரிகை, கலை, இலக்கிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமையைக் கௌரவித்து, 2016ஆம் ஆண்டு கலாசார அமைச்சால் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X