Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் சமாதானம், நல்லிணக்கம், அமைதி வேண்டி நடைபவனி ஒன்றை அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பகுதியிலிருந்து திங்கட்கிழமை (22) காலை ஆரம்பித்துள்ளார்.
சில்ரன் பெரேரா எனும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியே இவ்வாறு நடைப்பவணியாக இலங்கை முழுவதிலும் உள்ள முக்கியமான நகரங்களின் ஊடாக தன்னுடைய சமாதான நடைப்பவணியை மேற்கொள்ள உள்ளார்
அதில் ஒரு கட்டமாக மட்டக்களப்பு காத்தான்குடி நகரை வந்தடைந்த இவரை காத்தான்குடி அல் அக்சா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்று அவருக்கு தேசியக் கொடியினால் அவரைப் போர்த்தி வரவேற்றுள்ளனர்.
காத்தான்குடி அல அக்சா ஜும்ஆப் பள்ளிவாயிலின் தலைவர் கே. எல். எம். பரீத் , செயலாளர் முஹம்மத் இர்பான் உட்பட பள்ளி வாயல் நிர்வாக உறுப்பினர்கள் இவரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதுடன் அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலின் இவரை கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது .
குறித்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தேசியக் கொடியை ஏந்தியவாறு இந்த நடைபவணியில் ஈடுபட்டுள்ளதுடன் இலங்கையில் பள்ளின பன்மைததுவ சமூக நல்லிணக்க மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த நடைபாவணியை சமாதான நடைப்பவணியாக தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .
குறித்த அதிகாரி கிழக்கு மாகாணம் வடமாகாண உட்பட கொழும்பு கண்டி போன்ற பல்வேறு நகரங்களுக்கு சென்று மீண்டும் அவர் அவருடைய சொந்த ஊரான மத்திய முகாமை அடைய உள்ளார்
மேலும் , இவரது சமாதான நடைபவணியை ஊக்கு விக்கும் வகையில் பெளத்த மத தேரர்கள் மற்றும் பலரும் இவரோடு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
எம். எஸ். எம். நூர்தீன்
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago