2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா போதைப்பொருளுடன் கைதான நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.எல்.ஏ.றஸீட் இன்று (06) உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்  நேற்றிரவு (05) மோப்ப நாயின் உதவியுடன் அட்டாளைச்சேனை -01 ஆம்பிரிவில் உள்ள குறித்த நபரின் வீட்டை சுற்றி வளைத்து நடத்திய சோதனையின் போதே அவரை கைது செய்தனர்.

இதன்போது,கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 14 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .