Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ், வி.சுகிர்தகுமார்
உகந்த சுற்றாடலைக் கட்டியெழுப்பும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கடற்கரைச் சூழலைச் சுத்தப்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்துக்கமைவாக, கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் நிகழ்வு, அக்கரைப்பற்றில் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் 241ஆவது படைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வேலைத் திட்டத்தில், சுமார் 400க்கும் அதிகமான இராணுவத்தினர் கலந்துகொண்டு, கடற்கரைத் தூய்மைப்படுத்தினர்.
மேற்படிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் டபள்யூ.பி.ஜே.கே.விமலரத்ன தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் முதல் பெரிய நீலாவணைப் பிரதேசம் வரையான சுமார் 35 கிலோமீற்றர் கொண்ட கடற்கரையோரப் பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டது.
இவ்வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, இராணுவத்தின் 241ஆவது படைப்பிரிவின் மேஜர் அனுர புண்ணியசிறி, மேஜர் யு.எல்.சி.ஜயசேன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடற்கரைப் பிரதேத்திலுள்ள பல்வேறு கழிவுப் பொருள்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, பிளாஸ்ரிக் பொருள்கள், உக்காத கழிவுப் பொருள்கள், உக்கக்கூடிய கழிவுப் பொருள்கள் போன்றன தரம் பிரிக்கப்பட்டு, அவை திண்மக் கழிவு முகாமைத்துவம் செய்யப்படும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
7 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago