2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கடலரிப்பை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தின் அக்கரை 4ஆம் பிரிவில் குடியிருப்புப் பகுதியை அண்டி ஏற்பட்டுள்ள கடலரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் கருங்கல்லிலான தடுப்புச் சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் நாளை புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜெஸுர் ஆகியோர் ஒலுவில் பிரதேசத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிக்கப்பட்ட அக்கரை 4ஆம் பிரிவைப் பார்வையிட்டனர்.

கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், அக்கரை 4ஆம் பிரிவிலுள்ள 25 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வீடுகளிலுள்ள மக்கள் இடம்பெயரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேற்படி தடுப்புச் சுவர் அமைப்பதற்கான  நிதியை கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமாகக் கடலரிப்பைத் தடை செய்வதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X