2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடலில் நீராடிய இரு சகோதரர்கள் மாயம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்றுக்  கடலில் நேற்றுக் காலை நீராடிக்கொண்டிருந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று இளைஞர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில்  ஒருவர் அலையால் அள்ளுண்டுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காகச் இச்சகோதரர்களும்  அலையால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும், ஏற்கெனவே கடல் அலையில் அள்ளுண்ட 16 வயதுடைய சிறுவன் உயிர் தப்பியுள்ளான்.

நாவற்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த குமார் சகீத் (வயது 18), குமார்தீவு (வயது 20) ஆகிய இரு சகோதரருமே காணாமல் போயுள்ளார்கள்.
 
காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .