2025 மே 01, வியாழக்கிழமை

கடல் அலைகளில் அள்ளுண்டு வலைகள் நாசம் ; மீனவர்கள் கவலை

எஸ்.கார்த்திகேசு   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (22) நள்ளிரவு வேளையில் பாரிய இரச்சளுடன் கடல்நீர், நிலப்பகுதிகளை நோக்கி வந்ததால் இறங்குதுறைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க வலைகள், கடல் அலைகளில் அள்ளுண்டு போனதுடன், நிலத்துக்குள் மணல் மூடி புதைந்தும் நாசமாகியுள்ளதாக, மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரதேச ஆழ்கடல் மீனவர்கள் வலைகள் இல்லாத நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமைகள் காணப்படுவதாகவும் இதேவேளை ஒரு சில மீனவர்களின் வள்ளங்களும், இழுவை இயந்திரங்களும் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுனாமி பீதி காரணமாக மருதமுனை, கல்முனை அக்கரைப்பற்று, தம்பட்டை திருக்கோவில், கோமாரி, பொத்துவில் போன்ற கரையோ பிரதேசங்களில் வாழும் சில குடும்பங்கள், அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று, மீண்டும்  காலை வேளையில் தங்களது வீடுகளுக்குத் திரும்பியிருந்தன.

நிலைமைகள் எவ்வாறு இருந்த போதிலும் கரையோர மக்கள் தொடர்ந்தும் இரவு வேளைகளில் குழந்தைகள், வயோதிபர்களுடன் அச்சத்துடன் தூங்க வேண்டிய நிலைமைகள் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .