Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூன் 17 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை கடற்கரைப் பகுதியிலுள்ள கட்டடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அப்பகுதியை பொதுமக்களுக்கான பொழுதுபோக்கிடமாக அழகுபடுத்தி, அபிவிருத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் ஏற்பாட்டில், தனது பங்கேற்புடன், பிரதேச செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற விசேட கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் திறந்த வெளியாக மாற்றி, அழகுபடுத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டத்துக்காக கல்முனை கடற்கரை வீதியில் இருந்து கடல் பக்கமாக அமைந்துள்ள குடியிருப்புகள், வாடிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் முதற்கட்டமாக கரையோரம் பேணல் திணைக்களத்தால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கால அவகாசம் வழங்கி, சிவப்பு அறிவித்தலை விடுப்பது எனவும் உரிய காலப்பகுதியினுள் கட்டடங்களை அகற்றாத நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago