2025 மே 01, வியாழக்கிழமை

கண்ணகி கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் தீ

Suganthini Ratnam   / 2017 மே 03 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று, கண்ணகி கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் செவ்வாய்க்கிழமை (2) இரவு தீ பரவியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

'திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்' என்ற பெயருடன் காணப்படும் குப்பைமேட்டிலேயே தீ பரவியுள்ளது.  
இந்தக் குப்பைமேட்டில் ஆலையடிவேம்புப் பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன.  

குறித்த குப்பைமேட்டில் தீ பரவியமையால், அங்கு புகை மூட்டகமாகக் காணப்படுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கரைப்பற்றுப் பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .