2025 மே 15, வியாழக்கிழமை

கதிர்காமம், உகந்தமலை கொடியேற்றங்கள் நாளை

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் கோவில், உகந்தமலை முருகன் கோவில் என்பனவற்றின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாக்கள், நாளை(21) நடைபெறவுள்ளன.

கொடியேற்றம் இடம்பெற்று, 15 நாள் திருவிழாவின் பின்னர் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன், ஆடிவேல் விழாக்கள் நிறைவடையவுள்ளன.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, திருவிழாவின் போதான பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக, குறித்த கோவில்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தின்போது, பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.

உகந்தமலைமுருகன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில், இவ்வருட கொடியேற்றத் திருவிழா இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருப்பதாகவும் இம்முறை ஆடிவேல்விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன், அதாவது தினமொன்றுக்கு 200 பக்தர்களுடன் நடத்த ஆரம்பக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் உகநதமலை முருகன் கோவில் வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திஸாநாயக்க(சுதா) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .