2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டம்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார், ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி.வணிகசிங்கவின் இடமாற்றத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கறுப்புப் பட்டியணிந்தும் கறுப்புக் கொடிகளை அலுவலயத்துக்கு முன்னால் பறக்கவிட்டும், தமது எதிர்ப்பை இன்று(18) வெளியிட்டனர்.

மாவட்ட செயலாளருக்கு வழங்கப்படவுள்ள இந்த இடமாற்றத்தின் பின்னால், அரசியல் பின்புலம் இருப்பதாகவும், இடமாற்ற விதிமுறைகளுக்கு அப்பால் இந்த இடமாற்றம் இடம்பெறவுள்ளது எனவும், அரச கடமைகளுக்கு இவ்வாறான அரசியல் தலையீடுகள் தடையாக இருக்கின்றன எனவும் தெரிவித்து, இவற்றைக் கண்டித்து, மாவட்ட செயலாளருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X