Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் “கலாயாத்ரா 2019” கௌரவிப்பு விழா, அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில், நாளை மறுதினம் (15) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளம் கலைஞர், மூத்த கலைஞர்கள், அதிதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர் என்பதுடன், பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கௌரவ அதிதிகளாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எல்.எச்.றம்யசிறி, அம்பாறை மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க, தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.அப்துல் மஜீட், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாவுல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஆகியோருடன் கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனரென, அக்கரைப்பற்று மத்திய கலாசார நிலையப் பொறுப்பதிகாரியும் கலாசார உத்தியோகத்தருமான ஐ.எல்.றிஸ்வான் தெரிவித்தார்.
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago