Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல்; கல்முனையிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட இ.போ.ச பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என, கல்முனைச் சாலையின் முகாமையாளர் வி.ஜௌபர், இன்று தெரிவித்தார்.
கதிர்காமத் தீர்த்தோற்சவம் முடிவடையும்வரை ஓகஸ்ட் 8ஆம் திகதிவரை இப்பஸ் சேவை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
தினமும் காலை 6 மணிக்கு கல்முனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் புறப்படுவதற்கு இப்பஸ் சேவையின் ஒருவழிக் கட்டணம் 430 ரூபாயாகும்.
இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து 490 ரூபாயும், களுவாஞ்சிக்குடியிலிருந்து 450 ரூபாயும், அக்கரைப்பற்றிலிருந்து 390 ரூபாயும், பொத்துவிலிலிருந்து 310 ரூபாயும்;, பாணமையிலிருந்து 270 ரூபாயும் கதிர்காமத்துக்கான ஒருவழிக் கட்டணமாக அறவிடப்படும் எனவும் அவர் கூறினார்.
முற்கூட்டிய ஆசனப் பதிவை பயணிகள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், முற்கூட்டி குழுவாகப் பதிவு செய்தால், தனி பஸ்ஸை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ்;கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
தீர்த்தத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களை மீண்டும் அழைத்துவரவும் கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர்;; தெரிவித்தார்.
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026