Suganthini Ratnam / 2017 ஜூலை 05 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்
கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு நடத்தும் 2017ஆம் ஆண்டுக்கான அரச கலை இலக்கியப் பெருவிழா, இம்முறை கல்முனை நகரில் நடைபெறும் என, அம்மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இந்த விழாவை எதிர்வரும் ஓகஸ்ட்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த விழாத் தொடர்பான கலந்துரையாடல், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்றது.
கல்முனை நகரில் தமிழ் -முஸ்லிம் மக்கள் கலந்து வாழ்கின்றனர். எனவே, இங்குள்ள மக்களினது பண்பாட்டு, கலாசார அம்சங்கள் இந்த விழாவில் பேசப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மூன்று நாட்கள்; தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவில் ஊர்வலம், ஆய்வரங்கு, கவியரங்கு, கலை நிகழ்ச்சிகள் போன்றன நடைபெறவுள்ளன.
அத்துடன், இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த கலைஞர்கள் பாராட்டப்பட்டு வித்தகர் விருது, இளம் கலைஞர் விருது, சிறந்த புத்தகத்துக்கான பரிசு என்பன வழங்கப்படவுள்ளன. மேலும் அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.
32 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026