Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 14 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு சுகாதாரப் பணியாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் கோரி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் இன்று (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுகாதார அமைச்சின் கீழ், நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் டெங்கு தடுப்பு பணியாளர்களாக நாம் கடமையாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
“தற்போது அரசாங்கத்தின் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் தம்மையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்தது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்களுடைய சேவையோடு எம்மை இணைத்து பார்க்க வேண்டாம்.
“எமக்கான நியமனத்தை சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதாரத்துறையில் வழங்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
“இன்றும் எமது பகல் நேர உணவு நேரத்தை தவிர்த்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
“எனவே, எமது நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago