2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனையில் வாகனத் தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்முனை நகரின் நீண்டகாலத் தேவையாக இருந்து வருகின்ற வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்தார்.

கல்முனை வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு, மாநகர முதலவர் செயலகத்தில் நேற்று (10) இரவு நடைபெற்றபோது, பிரதிநிதிகளால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே, முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் தலைமையிலான பிரதிநிதிகள், முதல்வருடனான இச்சந்திப்பின்போது கல்முனையில் நிலவும் குறைபாடுகள், அவசியத் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் முதல்வரிடம் கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .