2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனை விவகாரத்தை ஆராய குழு நியமனம்

Princiya Dixci   / 2021 மார்ச் 04 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக எவருக்கும் பாதகமில்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்று கிடைக்க வாய்ப்பிருப்பதாக கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர மேயர் செயலகத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துகின்ற விடயத்தில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. தமிழ் சகோதரர்களுக்கு ஒரு பிரதேச செயலகம் கொடுக்கக்கூடாது என்பது எமது நிலைப்பாடல்ல.
ஆனால், எல்லைகள் சரியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே இழுபறிக்கு காரணமாகும்.

“இது நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையாகும். தமிழ், முஸ்லிம் இரு தரப்புகளும் சுமூகமாக பேசித்தீர்வு காணப்பட வேண்டும். எவருக்கும் பாதகமில்லாமல், இரு தரப்பினரும் திருப்திப்படும் வகையில் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும்.

“இந்த அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் ஊடாக நல்லதொரு தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .