Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை எபிக் அமைப்பினரால் கல்முனை சாஹிபு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கணணி கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 14 வருடகாலமாக கல்முனைப் பிரதேசத்தில் தரம் 6 தொடக்கம் உயர்தர வகுப்பு வரையான மாணவர்களுக்கு இலவச கல்விச் சேவையை வழங்கி வரும் கல்முனை எபிக் அமைப்பினர் அம்மாணவர்களின் நலன் கருதியும் அம்மாணவர்களை நவீன உலகுக்கு தயார் செய்யும் நோக்கோடும் மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்துவதற்காகவும் இக் கணணி கற்கை நிலையத்தை திறந்து வைத்தனர்.
அமைப்பின் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு முகாமைத்துவ ஆதண சபையின் தலைவரும் சமூக சேவையாளரும் தொழில்லதிபருமான ஏ.எல்.எம்.கபுல் ஆஸாத் ஹாஜி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.ஐ.எம்.முஸ்த்தபா, எச்.எம்.ஆதம்பாவா, சிரேஷ்ட ஆசிரியர் யு.எம்.அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago