Editorial / 2017 ஜூலை 08 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் வாடிகானுக்குள் வீட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரத்துக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், 06 நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட், இன்று (08) தெரிவித்தார்.
வீட்டு கழிவு நீரை மிகவும் சூட்சகமான முறையில் வடிகானுக்குள் அகற்றியதால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் விசி வருவதோடு, சுகாதாரத்துக்கும் பெரும் பங்கம் ஏற்படுவதாக, பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, வடிகானுக்குள் கழிவு நீரை அகற்றிய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, கழிவு நீரை அகற்றிய குழாய் மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக, அவர் கூறினார்.
இந்நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 08 நபர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026