2025 மே 05, திங்கட்கிழமை

காணிகளுக்குரிய ஆவணம் வழங்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சுனாமி வீட்டுக் குடியிருப்பாளருக்கான காணிகளுக்குரிய ஆவணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.ஏ. வஹாப் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சுனாமி அனர்த்தத்தில் ஒலுவில் கிராமத்தில் 04ஆம், 06ஆம், 07ம் பிரிவுகளில் கரையோரத்தில் வசித்த சுமார் 65 குடும்பங்கள், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

“14 வருடங்களுக்கு முன்னர் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, இதுவரையும் மீள் குடியேற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதி வழங்கப்படாததால் குடியிருப்பாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்” என, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அஷ்ரப் நகரில் வழங்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு காணிக்கான உறுதி வழங்கப்படாமையால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் எல்லைகளையிடுவதற்கு பல சிக்கல்களை எதிர்நோக்கி வருவதோடு, சரியான முறையில் அடயாளம் இடுவதற்கும் சுற்றி வர வேலி அமைக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X