2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாகக் குடியிருந்துவரும் மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், புதிதாகக் காணி அனுமதிப் பத்திரங்கள்  வழங்கப்பட்டன.

இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி)  தலைமையில், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (08) இந்நிகழ்வு நடைபெற்றது.

காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர் உட்பட காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .