Editorial / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று (20) கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
இக் கையெழுத்துப் போராட்டமானது, காரைதீவு பொதுச் சந்தை மற்றும் கல்முனை பகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்றது.
காரைதீவு பொதுச் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்துக்கு, இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமைதாங்கினார்.
கல்முனையில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தலைமை தாங்கினர்.
இதன்போது, த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் ஞா.சிறிநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்கானது ஆகும்” என இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தத்தமது உரையில் குறிப்பிட்டனர்.
21 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago