Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 21 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். அப்ராஸ், நூருள் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்துக்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான சுமார் 3.4 கிலோ மீட்டர் கடற்கரை வீதி காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினரும், வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயக்கவின் இணைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் இன்று (21) நடைபெற்றது.
அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வழிகாட்டலில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'பிரதேச செயலகத்துக்கு ஒரு மைதான அபிவிருத்தி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது கடற்கரை பௌஸி மைதானத்துக்கான கரப்பந்தாட்ட மைதானத்தை அபிவிருத்தி செய்ய இதன்போது அடிக்கல் நடப்பட்டது.
இந்த ஆரம்ப நாள் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் டி .எம் . வீரசிங்க பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திலக்ராஜபக்ஷ கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் , பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.அப்துல் சமட், வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ. வீரசிங்கவின் இணைப்பாளர் ஜௌபர் மற்றும் பொது ஜன பெரமுன முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago