2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.இன்ஸான் என்ற 5 வயது சிறுவன், நேற்று (16) பிற்பகல் 5 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 10, அட்டப்பள்ளம், சமாதான கிராமத்தில் வசித்து வரும் இச்சிறுவன், தனது குடும்பத்தாருடன் பொழுதுபோக்குக்காக அட்டப்பள்ளம்  கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது கடற்கரைப் பிரதேசத்தில் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, நிந்தவூர்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X