Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 17 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 78 பேர் மரணித்துள்ளனர் எனவும் முதல் இரு கொரோனா அலைகளைவிட, மூன்றாவது அலையில் மரண விகிதம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையின்போது 25 என்றிருந்த மரணத்தொகை, மூன்றாவது அலையின்போது,இரண்டுமடங்கையும் தாண்டி தற்போது 53ஆகி அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 6,336 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இதில் மூன்றாவது அலையில் மாத்திரம் 2,631 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 1,291 பேரும், அம்பாறைப் பிராந்தியத்தில் 837 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 430 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 73 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago