Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2018 ஜூன் 18 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்சியின் தலைமைகள் பல கருத்துகளை முன் கொண்டு, சில முடிவுகளை எடுக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், “கூட்டுக் கட்சியென்பது, தமிழரசுக் கட்சிக்கு ஒரு சோதனை” எனவும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் கட்சி புனரமைப்புக் கூட்டம், திருக்கோவில், விநாயகபுரம், திருநாவுக்கரசு நாயனார் குருகுல கேட்போர் கூடத்தில், பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது.
இங்கு தொடரந்து கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர், “கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் தங்களின் முடிவுகளை சிறிய வட்டத்துக்குள் நின்று கொண்டுதான் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், தலைமைகள் அவ்வாறு அல்ல. அவர்கள் பல கோணங்களில் சிந்தனை செய்து, பரந்துபட்ட தூரநோக்குடன், முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.
“இன்று கூட்டுக் கட்சியென்பது, தமிழரசுக் கட்சிக்கு ஒரு சோதனை. இந்த சோதனையில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டத்தை வெற்றிகொள்வதுதான் சோதனையின் வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார்.
இன்றைய நிலையில், பல கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால், தமிழரசுக் கட்சியை உடைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே, இதுவரை பிரிந்து சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனவே, முடிவெடுப்பதில் தலைமைகள் அது நியாயப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.
“தமிழ் மக்களின் விடுதலையை வெற்றிகொள்ள வேண்டும் என்ற இலக்குடன் நாம், தியாகப் பயணத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றோம்” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago