2025 மே 05, திங்கட்கிழமை

கொரோனா சிகிச்சை நிலையங்கள் விஸ்தரிப்பு

Princiya Dixci   / 2021 மே 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொரோனா சிகிச்சை நிலையங்களை விஸ்தரிக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (13) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக கொரோனாத் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் புதிதாக கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு புதிதாக அதி தீவர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அக்கரைப்பற்று பிரதேசத்திலும் கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையம் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

தேவைப்படும் பட்சத்தில் சம்மாந்துறையில் உள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம் போன்றவற்றில் கொரோனாத் தொற்று சிகிச்சை நிலையம் ஏற்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X