Princiya Dixci / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம், மக்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. எனவே, மாற்றுக் கொள்கையை அமுல்படுத்த முன்வரவேண்டும்” என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாவிதன்வெளி, சவளக்கடை பிரதேசத்தில் இன்று (18) நடைபெற்ற விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொண்டுகொண்டு, கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம், விவசாயிகளின் விருப்பு வெறுப்புக்களை ஓரம் தள்ளிவிட்டு, இந்த துறையில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையெல்லாம் கவனத்தில்கொள்ளாது செயற்படுகிறது.
“இயற்கை பசளைகளை வழங்கி, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தனது கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி உறுதி கொண்டுள்ளார். இந்த விடயமானது, விவசாயத்தை முற்றுமுழுதாக நாசமாக்கும் விடயமாக பார்க்கிறோம்.
“மொத்த தேசிய உற்பத்தியில் 22 சதவீத பங்களிப்பை செய்யும் எங்களின் பிரதேசத்தில் சேதனை பசளை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். கடந்த காலங்களில் எமது பிரதேச விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார்கள். பல்வேறு நஷ்டங்களை அடைந்திருந்தாலும் சிறப்பாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“சுபீட்சத்தின் நோக்குத் திட்டத்தை முன்மொழிந்து, மக்களை வறுமையின் பால் இந்த அரசாங்கம் கொண்டு செல்கின்றது” என்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago