2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொவிட் உடல்களை அடக்கம் செய்ய வானாகமுவவில் இடம்

Princiya Dixci   / 2021 மே 30 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் உடல்களை அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, இன்று (30) தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வானாகமுவ 02ஆம் பிரிவில் இதற்கான இடம் தகுதியென குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலாளர், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர், அம்பாறை மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியனவற்றால் கொவிட்-19 உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தகுதியான இடமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இக் கடிதத்தின் பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார வைத்தியதிகாரிகள், மாகாண விவசாய பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .