Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காட்டு யானையொன்றின் அட்டகாசத்தால் மக்கள் பாரிய சேதங்களை சந்திப்பதுடன் அச்சத்துடன் வாழவேண்டிய துர்ப்பாக்கியநிலையும் எழுந்துள்ளது.
இந்நிலைமை, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரிப்பிரதேசத்தில் நிலவிவருகிறது.
கோமாரி செல்வபுரக்கிராமத்துள் இன்று (08 ) அதிகாலை புகுந்த தனியன் யானை, வீடு வீடாகச் சென்று சேதத்தை விளைவித்துச் சென்றுள்ளது. இதனால், மக்கள் பீதியுடன் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
புளொக்கல்லால் கட்டப்பட்ட சில வீடுகளை தும்பிக்கையால் உடைத்து எறிந்துள்ளது. வீடடுக்குள்ளிருந்த நெல்மூடைகளை உறிஞ்சிக்குடித்துள்ளது.
சம்பவத்தையறிந்து கோமாரிப் பிரதேசத்துக்கான பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன், கிராம சேவையாளருக்கு அறிவித்துவிட்டு, ஸ்தலத்துக்கு விரைந்து ஆகவேண்டிய வேலைகளைக் கவனித்தார்.
தொடர்ச்சியாக தனியன் யானை அட்டகாசம் செய்துவருவது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இப்பிரதேசத்திலுள்ள காட்டுமடு எனும் வயற்பிரதேசத்தில் ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தைச் சேர்ந்த து.கஜேந்திரன் (வயது24) எனும் இளம் விவசாயி கடந்தவாரம் கொல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago