Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் நேற்று இரவு (21) வீடு ஒன்றில் பணம். நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கோளாவில் சங்கரப்பிள்ளை வீதியில் வசிக்கும் மா.முத்துலிங்கம் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டுரிமையாளர்கள் அனைவரும் உறவினரது மரண வீடொன்றிற்கு சென்றிருந்த வேளையிலேயே திருடர்கள் தங்களது கைவரிசைளை காட்டியுள்ளனர்.
வீட்டின் சமையலறை பகுதியின் கூரை வழியாக ஓட்டினை பிரித்து உள் நுழைந்த திருடர்கள், பெறுமதியான பொருட்களை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .