2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்

கல்முனைக்குடி பிரதேசத்தில் வைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைத் தாக்கிய நபர்கள் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்குடி 02 மற்றும் 04  பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சித்தீக் வெள்ளிக்கிழமை (10) இரவு சமுர்த்தி பயனாளிகளுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து கொண்டிருந்தபோது, சிலர் தமக்கும் அந்தக் கொடுப்பனவைத் தர வேண்டும் என்று கோரி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான சமுர்த்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைதுசெய்து, சட்ட நடவடிக்கை  எடுக்குமாறு, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் ஆகியோர் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலகசிரி, பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .