Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 08 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், தீஷான் அஹமட்
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4 நாள்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது தவிர வைத்தியசாலைகள், இராணுவ முகாம்கள் ,தகனசாலைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பேக்கரிகள் என ஆகியவற்றுக்கு கையிருப்பில் இருந்த எரிவாயுகள் கட்டுப்பாடுகளுடன் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.
தற்போது எரிவாயு முடிவடைந்துள்ளதுடன் கையிருப்பில் களஞ்சியப்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் முடிவடைந்தமையால் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சுமார் 100க்கும் அதிகமான பேக்கரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
மேலும், திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்திலும் அதிகமான ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
32 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago