2025 மே 15, வியாழக்கிழமை

சம்மாந்துறைத் தவிசாளராக மீண்டும் நௌஷாட் தெரிவு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், எம்.சி.அன்சார்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம்.நௌஷாத்  தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உள் ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், சம்மாந்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில், புதிய தவிசாளர் தெரிவுக்கான அமர்வு, இன்று (02) நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.எம்.றாபி, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர், சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆணையாளரால் தலைவரைத் தெரிவுசெய்யுமாறு கோரப்பட்ட போது,  ஏ.எம்.எம். நௌஷாத்,  ஐ.எல்.எம். மாஹீர் ஆகியோர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், ஏ.எம்.எம். நௌஷாத் 13 வாக்குகளையும், ஐ.எல்.எம். மாஹீர் 07 வாக்குகளையும் பெற்றனர்.

இதனையடுத்து, சம்மாந்துறை பிரதேச சபையின் தலைவராக ஏ.எம்.எம்.நௌஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .